திருப்பத்தூரில் உள்ள ஆர்.ஆர். ஹோட்டலில் வாங்கிய பிரியாணியில் கரப்பான் பூச்சி இருந்ததாகவும், இது குறித்து புகார் அளித்தும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் விமல்ராஜ் என்பவருக்கு சொந்தமான ஆர்.ஆர். ஹோட்டலில் வாங்கி சாப்பிட்ட பிரியாணியில் கரப்பான் பூச்சி இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து உரிமையாளரிடம் கேட்ட போது அவரே போட்டுவிட்டு பேசுவதாக அடாவடியாக பேசியதாக கூறப்படுகிறது.