சேலம் மாவட்டம், மேட்டூர் அனல் மின் நிலையத்தில் நிலக்கரி சேமிப்புத் தொட்டி உடைந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர். அனல் மின் நிலையத்தின் ஆறாவது யூனிட்டில் சாம்பல் செல்லும் குழாய் மற்றும் மேலடுக்கு தொட்டி உடைந்து சாய்ந்தது. இதில் சிக்கி 3 ஒப்பந்த தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.