கடலூர் மாவட்டம் நெய்வேலியில் கனமழை காரணமாக என்.எல்.சி நிறுவனத்தில் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக சுரங்கங்களில் ஆங்காங்கே மழை நீர் பெருக்கெடுத்து நீர்வீழ்ச்சி போல் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் தொடர்ந்து நிலக்கரி வெட்டி எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில் அனல்மின் நிலையங்களில் மின் உற்பத்தி தங்கு தடை இன்றி நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.