நாளை முதல் களை கட்டும் சென்னை சங்கமம் நிகழ்ச்சிகளை காண, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததோடு, அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறவுள்ள சென்னை சங்கமம் நிகழ்ச்சியில், மரபார்ந்த நாட்டுப்புற கலை வடிவங்களையும், கலைஞர்களையும் ஆதரித்திட வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், ஆட்சி பொறுப்பேற்ற போது கொரோனா 2ஆவது அலையின் கடுமையான தாக்கம், நிரந்தர கொரோனாவை போல் தாக்கி கொண்டே இருக்கும், மத்திய பாஜக கூட்டணி அரசின் வஞ்சகம், இயற்கை பேரிடர்கள் என அனைத்தையும் கடந்து தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்வதாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.இதையும் பாருங்கள் - சபரிமலையில் குவிந்த பக்தர்கள்