புதுக்கோட்டையில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உரியடி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட திருவப்பூர் சௌராஷ்ட்ரா தெருவில் உள்ள ஸ்ரீ வேணுகோபால சுவாமி உடனுறை ராதா ருக்மணி கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு, உரியடி திருவிழா, வழக்கு மரம் ஏறும் போட்டி மிக விமர்சையாக நடைபெற்றது.முன்னதாக, ஸ்ரீ வேணுகோபால சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு திருவப்பூர் சௌராஷ்டிரா தெருவில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து, சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை வழுக்கு மரம் ஏறும்போது, உற்சாகமாய் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும் உரியடித்தும் கிருஷ்ண ஜெயந்தி விழாவை வெகு விமர்சையாக கொண்டாடினர்.