சென்னை மாநகர் முழுவதும் சாலைகளில் குவிந்துள்ள பட்டாசு கழிவுகளை அகற்றும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதிகளவிலான பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால், நகரின் பல இடங்களில் காகிதங்கள் உள்ளிட்ட பட்டாசு கழிவுகள் சேர்ந்தன. இவற்றை அப்புறப்படுத்தும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர்.