தூய்மை பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்கு தீர்வு காண திமுக அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றஞ்சாட்டியுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் காரை கூட்ரோடு பகுதியில் பேட்டியளித்த அவர், 2026ல் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தார்.