தஞ்சை மாநகராட்சி நிர்வாகம் பத்து கோடியே 12 லட்சம் ரூபாய் மோசடி செய்திருப்பதாக குற்றம்சாட்டி துப்புரவு தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை மாநகராட்சியில் பணியாற்றி வரும் 400க்கும் மேற்பட்ட நிரந்தர துப்புரவு தொழிலாளர்கள் தஞ்சை கூட்டுறவு மற்றும் கடன் சங்கத்தின் கடன் பெற்ற நிலையில் சம்பளத்திலிருந்து மாதம் மாதம் பிடித்தம் செய்யப்படுகிறது. பிடித்தம் செய்யப்பட்ட தொகையை மாநகராட்சி நிர்வாகம் வங்கிக்கு செலுத்தப்படவில்லை என கூறப்படும் நிலையில் வாங்கிய கடனுக்காக துப்புரவு தொழிலாளர்களுக்கு நோட்டீஸ் வந்துள்ளது.