சென்னை மாநகராட்சியின் 5 மற்றும் 6 வது மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியார் வசம் ஒப்படைப்பதை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் தூய்மைப் பணியாளர்கள், அவர்கள் ஏற்கனவே வேலை செய்து வந்த இடங்களில் இன்று சம்பளம் இல்லாமல் வேலை செய்து தங்களது எதிர்ப்பை வெளிக்காட்டினர். வேலை கொடு வேலை கொடு மாநகராட்சியே வேலை கொடு என பேசின் பிரிட்ஜ் மற்றும் பட்டாளம் பகுதியில் தூய்மைப் பணியில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களை போலீசார் கைது செய்தனர்.