சென்னை கொடுங்கையூரில் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களுமின்றி கூலிதொழிலாளி ஒருவர் கழிவுநீர் கால்வாயை சுத்தப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெங்கடேஸ்வரா நகரில் மாநகராட்சிக்கு தகவல் தெரிவிக்கப்படாமல், தன்னிச்சையாக கூலி கொடுத்து ஏழைத்தொழிலாளி ஒருவரை கால்வாயை சுத்தப்படுத்திய சம்பவம் காண்போரை பரிதாபப்பட வைத்தது.