புதுக்கோட்டையில் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் கழிவுநீர் வாய்க்காலில் இறங்கி மாநகராட்சி ஊழியர்கள் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்த நிலையில், நகர் பகுதியில் கே.கே.சி கல்லூரி அருகே உள்ள கழிவுநீர் வாய்க்காலில் குப்பைகள் தேங்கியிருந்தன. இந்நிலையில் கையுறை, முக கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் இல்லாமல், வாய்க்காலில் இறங்கி மாநகராட்சி ஊழியர்கள் குப்பைகளை தூய்மை செய்தனர்.