தென்காசி மாவட்டம் சிவகிரியில் உள்ள அரசு மருத்துவமனையில் நோயாளி ஒருவருக்கு தூய்மை பணியாளர் கட்டு போடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் பற்றாக்குறையால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாத அவலநிலை காணப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.