திருவண்ணாமலை மணலூர்பேட்டை சாலையில் தூய்மை பணியாளர்கள் குடியிருப்பு அருகே உள்ள குப்பை கிடங்கில் தீவிபத்து ஏற்பட்டது. குப்பை கிடங்கு முழுவதும் கொளுந்து விட்டு எரிவதால், அப்பகுதியில் உள்ள சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு கரும்புகை மூட்டம் சூழ்ந்து காணப்படுகிறது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.