நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே கண்டிப்புதூர் நகராட்சி துவக்க பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் சிலர் மதிய உணவு இடைவேளையின்போது, பள்ளி வகுப்பறையை சுத்தம் செய்யும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. மாணவிகளை பள்ளி நிர்வாகமே இத்தகைய செயல்களில் ஈடுபட வைப்பதாக கூறப்படுகிறது.