ஆற்காடு அருகே சக மாணவர்கள் கிண்டல் செய்வதாக புகார் அளித்தும் ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்காததால் மனமுடைந்த பத்தாம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். ராணிப்பேட்டை மாவட்டம் வரகூர் பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி சிவகுமார். இவரது 15 வயது மகள் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் நிலையில் வகுப்பறையை சுத்தம் செய்யக்கூறிய சக மாணவர்கள் கிண்டலும் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து புகார் அளித்தும் ஆசிரியர் நடவடிக்கை எடுக்காததால் தான் அரளி விதையை அரைத்து சாப்பிட்டதாக மாணவி கண்ணீர் சிந்தினார். நடவடிக்கை எடுக்காத ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.