மதுரையில் டேக்வாண்டோ போட்டிக்கு அழைத்துச் சென்று மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த கன்னியாகுமரி பயிற்சியாளர் மீது போக்சோ சட்டத்தில் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பிள்ளைத்தோப்பு பகுதியை சேர்ந்த டேக்வாண்டோ பயிற்சியாளர் பிரதீப், ராஜாக்கமங்கலம் பகுதியை சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவியை, மதுரையில் நடைபெற்ற டேக்வாண்டோ போட்டிக்கு அழைத்துச் சென்றார். போட்டி முடிந்து, விடுதி அறையில் தூங்கிக் கொண்டிருந்தபோது, மாணவியை பாலியல் ரீதியாக பிரதீப் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. வீடு திரும்பிய பிறகு, இதுகுறித்து மாணவி பெற்றோரிடம் தெரிவிக்கவே, போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.