திருவாரூரில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆதரவாக மோதலில் ஈடுபட்ட நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்ட 11 பேர் மீது சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒருவரை கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வரும், நாகை மேலசகடமங்களம் கிராமத்தை சேர்ந்த விஷ்வா என்ற மாணவனுக்கும், பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த பிரவீன் என்ற மாணவனுக்கும் வகுப்பில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மாணவர்களுக்கு ஆதரவாக அவர்களது நண்பர்களும், உறவினர்களும் பள்ளிக்கு வெளியே மோதலில் ஈடுபட்ட நிலையில், மாணவன் விஷ்வா காயமடைந்து திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.