தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது இரு தரப்பினர் இடையே மோதல் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை சின்னமனூர் முல்லை பெரியாற்றில் கரைத்துவிட்டு ஒரு தரப்பினர் மார்க்கையன்கோட்டைக்கு சென்று கொண்டிருந்தபோது, விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக மற்றொரு தரப்பினர் எதிரே வந்தனர்.அப்போது இருதரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்ததோடு, மாறி மாறி கற்களை வீசி தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர்.இருப்பினும் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.