சேலத்தில் பட்டாசு வெடிப்பதில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், 4 பேரை போலீசார் கைது செய்தனர். செம்மண் திட்டு பகுதியை சேர்ந்த சதீஷ்குமாரை, மற்றொரு தரப்பினர் வீட்டின் மேற்கூரையை உடைத்து சென்று பலமாக தாக்கினர். இதை தடுக்க வந்தவர்களையும், இளைஞர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.