நெல்லை மாவட்ட வண்ணாரப்பேட்டையில் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் இருதரப்பினர் சரமாரியாக மோதிக்கொண்டனர். வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிலர் மது அருந்தி விட்டு உணவு பந்திக்கு வந்தபோது வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் ஒருகட்டத்தில் கைக்கலப்பாக மாறி ஒருவரை ஒருவர் சரமாரிய தாக்கிக்கொண்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்கள் மோதலை தடுத்து நிறுத்தினர்.