கண்டித்து, எம்ஜிஆர் நகரில் உள்ள குடிநீர் வாரிய அலுவலகம் முன்பு பொதுமக்கள் சங்கு ஊதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் கட்சியினருடன் சேர்ந்து போராட்டம் நடத்திய பொதுமக்கள், குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் பகுதியில், பல ஆண்டுகளாக முறையான குடிநீர் வசதி இல்லாமல் கழிவு நீர் கலந்த தண்ணீரை குடிப்பதாகவும் இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை எனவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.