திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே கோயில் திருட்டுகள் அடிக்கடி நடைபெறுவதாகக் கூறி பொதுமக்கள் காவல்துறை வாகனத்தை சிறைபிடித்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. பரமனந்தல் பகுதியில் திருவள்ளுவர் நகர் ஏரிக்கரையின் மேல் அமைந்துள்ள மாரியம்மன் கோயிலின் பூட்டை உடைத்து உண்டியல் பணம் மற்றும் அம்மன் நகைகளை திருட முயன்ற மர்ம நபர்களை மக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில் முறையான தண்டனை வழங்காததே தொடர் திருட்டு சம்பவங்களுக்கு காரணம் எனக்கூறி பொதுமக்கள் வாக்குவாதம் செய்தனர்.