திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் நர்சிங் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், தலைமறைவாக இருந்த தாளாளர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். கிறிஸ்டி பாரா மெடிக்கல் மற்றும் நர்சிங் கல்லூரி தாளாளர் விஜய்சீகன் பால், தனது கல்லூரியில் படிக்கும் மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.