தேனி சோத்துப்பாறை அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், அணைக்கு வரும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இந்த நிலையில், 126.28அடி உயரம் கொண்ட சோத்துப்பாறை அணை, தனது முழு கொள்ளளவை எட்டி கடல் போல காட்சியளிக்கிறது. மேலும், பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.