தென்பெண்ணை ஆற்றில் அமைந்துள்ள சித்தேரி அணைக்கட்டில் இருந்து பெருக்கெடுத்து ஓடும் உபரி நீரால், பொது மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி, ஒலிபெருக்கி மூலம் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்தது. திருவண்ணாமலை சாத்தனூர் அணையிலிருந்து திறந்து விடப்படும் உபரி நீரானது, தென்பெண்ணை ஆற்று வழியாக புதுச்சேரி நோக்கி பெருக்கெடுத்து வருகிறது. இதனால், புதுச்சேரி சித்தேரி அணைக்கட்டில் மதகுகள் திறந்து விடப்பட்டதன் காரணமாக, தென்பெண்ணை ஆற்று பகுதியில் இரு புறமும் இருக்கக்கூடிய பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என ஒலிபெருக்கி மூலம் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.