தொழிற்சாலைகள் அமைப்பதற்கு அத்தியாவசியமான விவசாய நிலங்களை மட்டுமே எடுப்பதாகவும், தேவையற்ற நிலங்களை எடுக்கவில்லை என்றும் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்தார். கிருஷ்ணகிரிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், சிப்காட் தொழில் நண்பன் சந்திப்பு கூட்டத்தை நடத்தி, நிறுவனங்களின் செயல்பாடுகள், உற்பத்தி குறித்து ஆய்வு நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே விவசாய நிலங்கள் எடுக்கப்படுவதாகவும், அதற்கு பன்மடங்கு விலை கொடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.