சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே அரசு நகர பேருந்தில் பள்ளி மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட நடத்துநர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். எடப்பாடி பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி அங்குள்ள அரசு பள்ளி ஒன்றில் 7 ம் வகுப்பு படித்து வரும் நிலையில் தினமும் அரசு நகர பேருந்தில் சென்று வந்தார். இந்நிலையில் நடத்துநர் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக மாணவியின் பெற்றோர் அளித்த புகாரில் நடந்துநர் சின்னசாமியை சங்ககிரி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் கைது செய்தனர். நடத்துநர் மற்ற மாணவிகளிடமும் சில்மிஷத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.