சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியில் போதை பொருட்களுடன் மயங்கி கிடந்த மூன்று சிறுவர்களை மீட்டு பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேட்டுத்தெரு பகுதியில் உள்ள கலையரங்கம் தியேட்டர் வாசலில் மூன்று சிறுவர்கள் மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர். அப்பகுதி மக்கள் சிறுவர்கள் குறித்து போலீசாருக்கு தகவல் அளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுவர்களை எழுப்பி விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் குட்கா பயன்படுத்தியது தெரியவந்தது. இதனையடுத்து சிறுவர்களுக்கு அறிவுரை கூறி போலீசார் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.