திருப்பத்தூர் மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் தொடங்கி வைத்தார். ஜோலார்பேட்டை விளையாட்டு அரங்கில் தமிழக அரசு சார்பில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளின் துவக்க விழா நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ், ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் விஸ்வநாதன் ஆகியோர் முதற்கட்டமாக 800 மீட்டர், 3000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தை தொடங்கி வைத்தனர்.