ஆங்கில புத்தாண்டு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவு இடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மனைவி துர்கா ஸ்டாலினுடன் சேர்ந்து மலர் தூவி மரியாதை செலுத்திய முதலமைச்சர், அங்கு வந்திருந்த பொதுமக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவித்து மகிழ்ந்தார்.