புதுச்சேரி - ஆரோவில் பகுதியில் கிரிக்கெட் மைதானத்தை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி திறந்து வைத்து, கிரிக்கெட் விளையாடிய வீடியோ வெளியாகியுள்ளது. புதுச்சேரியை அடுத்துள்ள ஆரோவில் பகுதியில் புதிய கிரிக்கெட் மைதானத்துக்கான திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட ரங்கசாமி, கிரிக்கெட் மைதானத்தைத் திறந்து வைத்தார். பின்னர், கிரிக்கெட் வீரர்கள் நலமுடன் இருப்பதற்குப் பூஜை செய்த முதலமைச்சர் ரங்கசாமி, அனைவருக்கும் நெற்றியில் விபூதி பூசினார்