புதுச்சேரியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் 3D மேமோகிராம் வசதியுடன் கூடிய மார்பக பராமரிப்பு மையத்தை முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார். இந்த மையம், ஜீனியஸ் செயற்கை நுண்ணறிவு திறன்களுடன் கூடிய ஹாலோஜிக் 3D டோமோசிந்தசிஸ் மேமோகிராம் சிகிச்சையை அளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிநவீன தொழில்நுட்பம், அடர்த்தியான மார்பக திசுக்களில், மார்பக புற்றுநோயை துல்லியமாக கண்டறியும் எனவும், அதேசமயம் தேவையற்ற கால்பேக்குகள் மற்றும் பயாப்சிகளை குறைப்பதாகவு தெரிவிக்கப்பட்டது. மேலும், புதுச்சேரியில் திறக்கப்பட்டுள்ள இந்த மையம், சென்னையில் உள்ள அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது.இதையும் படியுங்கள் : வாழ்த்து பெற்ற மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கிய இபிஎஸ்..!