கூலி பட கெட்-அப்பில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை ரஜினி போல் சித்தரித்து வைக்கப்பட்டுள்ள பேனர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி ஆகஸ்ட் 4 ஆம் தேதி பிறந்தநாளை கொண்டாட உள்ளார். அவருக்கு வாழ்த்து கூறும் வகையில் என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் விதிகளை மீறி நகரெங்கும் உள்ள சாலை மற்றும் கட்டிடங்களை மறைத்து பேனர்களை வைத்துள்ளனர். அதில் கூலி ரஜினிகாந்த்,தெறி விஜய், ரெட்ரோ சூர்யா, புஷ்பா அல்லு அர்ஜுன், பொன்னியின் செல்வன் என விதவிதமான கெட் அப்பில் முதலமைச்சர் ரங்கசாமி காட்சியளிக்கிறார்.