கட்சிப் பொறுப்புகளில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சட்டமன்ற தொகுதி வாரியாக நிர்வாகிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசி வருகிறார். இது தொடர்பான ஒன் டூ ஒன் சந்திப்பில் கிருஷ்ணகிரி, அணைக்கட்டு மற்றும் சங்கராபுரம் ஆகிய 3 தொகுதி நிர்வாகிகளை சந்தித்து பேசினார். அப்போது பல்வேறு அறிவுரைகளை நிர்வாகிகளுக்கு வழங்கிய முதலமைச்சர், திமுக அரசின் மக்கள் நல திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.இதையும் படியுங்கள் : டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனியின் சாதனை முறியடிப்பு..