முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் இரண்டு கிலோ காய்ந்த மிளகாய் கொண்டு அவருடைய உருவப்படத்தை வரைந்து ஓவிய ஆசிரியர் அசத்தியுள்ளார். ஆரணி அம்பேத்கார் நகர் பகுதியை சார்ந்த ஹரிஷ்பாபு என்ற ஓவிய ஆசிரியர் இதனை வரைந்து முதலமைச்சருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.