தி.மு.க. பவள விழா பொதுக்கூட்டம் குறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் மூத்த நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார். தி.மு.க. முப்பெரும் விழா மற்றும் பவள விழா நிறைவடைந்த நிலையில், பவள விழா பொதுக்கூட்டம் காஞ்சிபுரத்தில் வரும் 28-ம் தேதி நடைபெறவுள்ளது. இது தொடர்பாக மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, பொன்முடி, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி. திருச்சி சிவா உள்ளிட்ட நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த பொதுக் கூட்டத்திற்கு கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கூட்டம் நிறைவடைந்த பிறகு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் இருந்து புறப்பட்டு சென்றார்.