திமுக முப்பெரும் விழாவில் பெரியார், அண்ணா, கலைஞர் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார். பெரியார் விருது பாப்பம்மாளுக்கும், அண்ணா விருது அறந்தாங்கி மிசா ராமநாதனுக்கும், கலைஞர் விருது ஜெகத்ரட்சகனுக்கும், பாவேந்தர் விருது கவிஞர் தமிழ்தாசனுக்கும், பேராசிரியர் விருது வி.பி.ராஜனுக்கும், மு.க.ஸ்டாலின் விருது எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்துக்கும் வழங்கப்பட்டது.