நெல்லை மாவட்டம் வண்ணாரப்பேட்டையில் ரோடு ஷோ நடத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குழந்தைகளை தூக்கி கொஞ்சி மகிழ்ந்தார். சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையில் நடந்து சென்ற அவரை, இருமருங்கிலும் திரண்ட பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்றனர். பலர் அவருடன் கைகுலுக்கியும், செல்ஃபி எடுத்தும் மகிழ்ந்தனர்.