டெல்லி முன்னாள் முதலமைச்சர் கெஜ்ரிவால் சிறைக்கு சென்றது போல, டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் சிறைக்கு செல்வது உறுதி என அதிமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் மு.தம்பிதுரை கூறினார். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற பூத் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்ற அவர், நரியனேரியில் பேசியபோது, காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசில் திமுக அங்கம் வகித்தபோதுதான், தமிழத்தில் நீட் உள்ளிட்ட திட்டங்கள் கொண்டு வரப்பட்டதாக குற்றம்சாட்டினார்.