மணிப்பூர் கலவரம், கும்பமேளா கூட்ட நெரிசலுக்கு எல்லாம், குழுவை அனுப்பாத மத்திய மோடி அரசு, கரூருக்கு மட்டும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை அனுப்புவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். ராமநாதபுரத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் ஸ்டாலின், கரூர் விவகாரத்தில் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார். அப்போது பேசிய அவர் பேசி இருப்பதாவது;கரூரில் விஜய் பரப்புரையின் போது, 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கரூருக்கு சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் கூறினார். இதற்கு முன்னதாக தமிழ்நாட்டில் மூன்று மிகப்பெரிய பேரிடர் வந்த போதும் வராத நிதியமைச்சர், தற்போது கரூருக்கு வருகிறார். மணிப்பூர் கலவரம், கும்பமேளா கூட்ட நெரிசல் பலிகளுக்கு எல்லாம், உடனடியாக விசாரணை குழுவை அனுப்பாத மத்திய மோடி அரசு, கரூர் விவகாரத்தில் மட்டும் வேகம் காட்ட என்ன காரணம்?மாநில நலன்களை புறக்கணித்து, மாநில உரிமைகளை பறிக்கும் வகையில், மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. அடுத்தவர் முதுகில் ஏறி சவாரி செய்யும் பாஜக, கரூர் விவகாரத்தில் யாரை தன் கன்ட்ரோலில் வைக்கலாம் என தேடிக் கொண்டு வலம் வருகிறது. தமிழ்நாட்டில் அக்கறை உள்ள யாரும் பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டார்கள்.இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசி உள்ளார்.