ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் 1 கோடியே 55 லட்சத்து ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள முத்துராமலிங்கத் தேவர் அரங்கத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். அக்டோபர் 30ஆம் தேதி கொண்டாடப்படும் தேவர் ஜெயந்தி விழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்துவர். அதற்காக திரளானோர் கூடும் போதும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டும், வெயில் மற்றும் மழையிலிருந்து பாதுகாத்திடும் வகையில் தேவர் நினைவிடத்தின் இரு நுழைவாயில்கள் முன் தேவர் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஆண்கள், பெண்கள், மாற்றத்திறனாளிகள் என அனைவரும் தனிதனியாக செல்ல வசதிகள் செய்யப்பட்டுள்ளது.