திமுக கூட்டணி வலுவாக இருக்கிறது என கூறும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எந்த இடத்திலும் திமுக வலுவாக இருக்கிறது என்று சொல்லவில்லை என எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் விமர்சித்தார். காஞ்சிபுரத்தில், அதிமுகவின் 53 ஆம் ஆண்டு தொடங்கவிழா பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், கூட்டணியை வைத்துக்கொண்டுத்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியை நடத்திக்கொண்டு இருப்பதாக கூறினார்.