மதுரையில் திமுக நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட பிரியாணியை சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்டோர் வாந்தி மயக்கம் ஏற்பட்டு அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். கள்ளிக்குடி அருகே உள்ள வில்லூரில் திமுக சார்பில் உறுப்பினர்கள் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் டோக்கன் அடிப்படையில் சிக்கன் பிரியாணி பார்சலில் வழங்கப்பட்டதாக தெரிகிறது. அதனை சாப்பிட்ட பலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்படவே வில்லூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்கு சென்றனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், ஆம்புலன்ஸ் மூலம் விருதுநகர் அரசு மருத்துவமனை, கள்ளிக்குடி ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.