தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள இந்தியன் கிரெஞ்ச் உணவகத்தில் 49 ரூபாய்க்கு சிக்கன் பிரியாணி கொடுத்ததால், கடை முன்பு கூட்டம் அலைமோதியது. ஒரே சமயத்தில் ஏராளமானோர் கடை முன்பு கூடியதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார், உணவகம் முன்பு கூடிய கூட்டத்தை ஒழுங்குபடுத்தி வாடிக்கையாளர்களை வரிசையில் நிற்க வைத்தனர்.