சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில், பல்லி இறந்து கிடந்ததை தெரியாமல் பிரியாணி சாப்பிட்டதால் வாந்தி மயக்கம் ஏற்பட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கொருக்குப்பேட்டையில் உள்ள பிஸ்மி உணவகத்தில் ராஜ்குமார் என்பவர் சிக்கன் பிரியாணி வீட்டிற்கு பார்சல் வாங்கி சென்று குடும்பத்துடன் சாப்பிட்டதாக கூறப்படுகிறது. சிக்கன் பிரியாணியில் பல்லி ஒன்று இறந்து கிடந்ததை பார்க்காமல் சாப்பிட்ட ராஜ்குமார் அவரது மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளிட்ட 6 பேருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது.