ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே ரயில் தண்டவாளத்தில் கிளிப்புகளை கழற்றிய சம்பவத்தில் சத்தீஸ்கர் தொழிலாளர்கள் 2 பேரை சிவகங்கை போலீசார் கைது செய்தனர். கடந்த 16 ம் தேதி பரமக்குடி- சூடியூர் இடையேயான தண்டவாளத்தில் கிளிப்புகள் கழன்று கிடப்பதாக கேட்கீப்பர் கொடுத்த தகவலின் பேரில் அவ்வழியாக வந்த ரயில்கள் பாதி வழியில் நிறுத்தப்பட்டு, கிளிப்புகளை பொருத்திய பின்னர் தொடர்ந்து ரயில்கள் இயக்கப்பட்டன. இது தொடர்பான தனிப்படை விசாரணையில், தண்டவாள பராமரிப்பு பணியை ஒப்பந்த அடிப்படையில் செய்து வரும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய சத்தீஸ்கர் தொழிலாளர்கள், மானமதுரையில் தங்கி வேலை செய்து வருவதும், குறைவான ஊதியம் வழங்கப்பட்ட அதிருப்தியில் ஒப்பந்த நிறுவனத்தை மாட்டி விடுவதற்காக தண்டவாள கிளிப்புகளை கழற்றியதும் தெரியவந்தது.