மதுரை மாவட்ட சதுரங்க வட்டம் மற்றும் அனந்தி சதுரங்க அகாடமி சார்பில் வரும் 24-ம் தேதி தொடங்கும் சதுரங்க போட்டிக்கு 44 லட்சம் ரூபாய் ரொக்க பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு சதுரங்க கூட்டமைப்பு தலைவர், வரும் 24-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை பத்து சுற்றுகளாக நடைபெறும் சதுரங்க போட்டியில் 25 நாடுகளில் இருந்து பல கிராண்ட் மாஸ்டர்கள் பங்கேற்க உள்ளதாகவும், அவர்களுக்கு பரிசு தொகையாக 44 லட்சம் ரூபாயும், 2 கார்கள், 6 பைக்குகள் மற்றும் 100 சைக்கிள்களும் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.