சென்னையின் முதல் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயிலை ஆய்வு செய்ய ரயில்வே அமைச்சகத்தின் தொழில்நுட்ப குழுவான RDSO நிபுணர் குழுவிற்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது. பூந்தமல்லி -போரூர் இடையே சுமார் 9 கிலோ மீட்டருக்கு ஓட்டுநர் இல்லாத முதல் மெட்ரோ ரயில் வரும் டிசம்பர் மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது. இதற்கு RDSO நிபுணர் குழுவின் அனுமதி அவசியம் என்ற நிலையில், இக்குழு சென்னை வந்து தங்கி மெட்ரோ ரயிலில் BREAKING SYSTEM உள்ளிட்ட பல்வேறு சோதனைளை நடத்துவர். அதைத் தொடர்ந்து நடக்கும் சோதனை ஓட்டத்திற்கு பிறகு ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் இயக்கப்படும்.இதையும் படியுங்கள் : FASTag அடிப்படையிலான வருடாந்திர பாஸ் நடைமுறை..