ஃபெங்கல் புயலை எதிர்கொள்ளும் வகையில் சென்னையில் காவல்துறையினர், படகுகள் உட்பட மீட்பு உபகரணங்களுடன் கூடிய 39 சிறிய கட்டுப்பாட்டு அறைகளை அமைத்து தயார் நிலையில் உள்ளனர். குறிப்பாக பொதுமக்களை பாதுகாக்கவும், மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மேற்கொள்ளவும் சென்னையில் உள்ள 12 காவல் மாவட்டங்களில் 39 சிறிய கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மீட்பு குழுவில் ஒரு எஸ்.ஐ தலைமையில் சுமார் 12 காவலர்கள் தயார் நிலையில் உள்ளதாகவும், அவர்களுக்கு ஆம்புலன்ஸ் வாகனம், தீயணைப்பு வாகனம், ரப்பர் படகுகள், மிதவை ஜாக்கெட்டுகள், மரம் அறுக்கும் இயந்திரங்கள் உட்பட 21 மீட்பு உபகரணங்கள் வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.