மழைக்கால வெள்ள பாதிப்பை தடுக்கும் வகையில் சென்னை வேளச்சேரி ஏரி 23.50 கோடி செலவில் தூர்வாரப்பட உள்ளதாக தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் சென்னை மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.இது தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது ஆட்சியர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், ஏரி தூர்வாரப்படுவதால் 22 சதவீதம் அளவுக்கு கூடுதலாக தண்ணீர் சேமிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் வேளச்சேரி ஏரி பகுதியில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வசித்து வரும் 955 குடும்பத்தினரை காலி செய்து வேறு இடத்தில் குடியமர்த்த தலைமை செயலாளர் அறிவுறுத்தி உள்ளதாகவும், ஏரியை குடிநீர் ஆதாரமாக உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.அரசின் முயற்சிகளுக்கு தீர்ப்பாயம் பாராட்டு தெரிவித்துள்ளது.